கருகலைப்பு மாத்திரையால் உயிரிழந்த 16 வயது சிறுமி..! அதிர்ச்சியில் பெற்றோர்..!!



16 years old girl died by take abortion tablet

திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி கரு கலைப்பு மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த தம்பதியினரின் மகள் 16 வயதுடைய சிறுமி இவர் திடீரென்று கர்ப்பம் அடைந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதியவர்கள் யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்து விட முடிவு செய்துள்ளனர். 

இதனால் மருத்துவமனைக்கு செல்லாமல் பக்கத்தில் இருக்கும் கிளினிக்கில் மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரை ஒன்றை வாங்கி சாப்பிட்டுள்ளார். 

இதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுமிக்கு வயிற்று வலி மற்றும் உபாதைகள் போன்றவை ஏற்பட்டுள்ளது. மேலும் வலியால் துடித்த சிறுமியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த 27ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாத்திரை கொடுத்த மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.