மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிகமான இரத்தப்போக்கு... பரிதாபமாக உயிரிழந்த 17 வயது சிறுமி.!! உறவினர் கைது.!!
நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பத்தை கலைப்பதற்காக மருந்து சாப்பிட்ட சிறுமி அதிக இரத்தப்போக்கால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்தப் பெண்ணின் உறவினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உறவினருடன் நெருக்கம்
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். 23 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான 17 வயது மாணவியுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கருவை கலைக்க முடிவு செய்து இருக்கின்றனர்.
அதிக இரத்தப்போக்கால் உயிரிழந்த சிறுமி
மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்தால் விஷயம் வெளியே தெரிந்து விடும் என பயந்து கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிட்டு தனது கருவை கலைக்க முயற்சி செய்திருக்கிறார் சிறுமி. அந்த மாத்திரைகளால் அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி சம்பவம்: ஒரு தலை காதல் கொடூரம்... கழுத்தறுத்து மாணவி படுகொலை.!! இளைஞர் தற்கொலை.!!
உறவினர் கைது
இதனைத் தொடர்ந்து சிறுமியின் இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது சிறுமியின் உறவினரான அரவிந்த் என்பவர் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமிக்கு கருவை கலைக்க மாத்திரை வாங்கிக் கொடுத்தாரா.? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த முக்கோண கள்ளக்காதல்... இலங்கை அகதிக்கு நேர்ந்த பரிதாப முடிவு.!!