#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி சம்பவம்: ஒரு தலை காதல் கொடூரம்... கழுத்தறுத்து மாணவி படுகொலை.!! இளைஞர் தற்கொலை.!!
சிவகங்கை மாவட்டத்தில் காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை கழுத்தறுத்து படுகொலை செய்த பின் இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ஒரு தலை காதல்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப் படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பிரான்மலை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற 26 வயது இளைஞர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். அவர் தனது காதலை மாணவியிடம் கூறிய போதும் அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கழுத்துறுத்து படுகொலை
இந்நிலையில் ஆகாஷ் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் தங்கள் மகளை நேசிப்பதாகவும் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறி இருக்கிறார். இதற்கு பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அரிவாள்மனையால் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக படுகொலை செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த முக்கோண கள்ளக்காதல்... இலங்கை அகதிக்கு நேர்ந்த பரிதாப முடிவு.!!
தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
மாணவியை கொலை செய்த பின் பாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து இருக்கிறார் ஆகாஷ். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காததால் ஆகாஷ் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இட்லி சாப்பிட்டதால் விபரீதம்; மூச்சுத்திணறி 15 வயது சிறுவன் பலி.!