மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொலையில் முடிந்த முக்கோண கள்ளக்காதல்... இலங்கை அகதிக்கு நேர்ந்த பரிதாப முடிவு.!!
தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவு தொடர்பான விவகாரத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாதவன் என்ற நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கோண கள்ளக்காதல்
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. கணவரைப் பிரிந்து 6 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்த இவருக்கு எதிர் வீட்டில் குடியிருந்த மாதவன் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த விஜிதரன் என்ற கண்ணன் என்ற நபருடனும் ராஜலட்சுமி நெருங்கி பழகி வந்திருக்கிறார். கண்ணன் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்காதல் ஜோடிகளுக்கு இடையே தகராறு
ராஜலட்சுமி, கண்ணனுடன் தொடர்பில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத மாதவன் அவரிடம் தகராறு செய்திருக்கிறார். மேலும் கண்ணனுடன் உறவை கைவிடுமாறும் ராஜலட்சுமி பலமுறை எச்சரித்திருக்கிறார் மாதவன். ஆனால் ராஜலட்சுமி இருவருடனும் தனது உறவை தொடர்ந்திருக்கிறார். இது தொடர்பாக கள்ளக்காதல் ஜோடிகளுக்கு இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இரவு மாதவனுடன் பேசிக் கொண்டிருந்த ராஜலட்சுமி அதன் பிறகு கண்ணன் வீட்டிற்கும் சென்று இருக்கிறார்.
இதையும் படிங்க: இட்லி சாப்பிட்டதால் விபரீதம்; மூச்சுத்திணறி 15 வயது சிறுவன் பலி.!
கொடூரமாக குத்தி படுகொலை
இதனைக் கண்டு கோபமடைந்த மாதவன், கண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கண்ணன் மற்றும் மாதவன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணன் வயிற்றில் குத்தி படுகொலை செய்து இருக்கிறார் மாதவன். மேலும் தடுக்க வந்த ராஜலட்சுமிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் கண்ணன் வீட்டிற்கு சென்று இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் காயமடைந்த ராஜலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மாதவனை சிறையில் அடைத்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளான கார்; 2 பெண்கள் பரிதாப பலி.!