மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகனின் பிறப்பு சான்றிதழ் வாங்கச்சென்று, இறந்து வீடு திரும்பிய தந்தை.. அரசு பேருந்து டூவீலரில் மோதியதில் உறவினர்கள் பலி.!
விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம் நோக்கி வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் பலியாகினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம் இருளர் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 25). இவரின் மனைவி தாட்சாயிணி, கடந்த மாதம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நேற்று வரை வாங்கப்படவில்லை.
நேற்று ஐயப்பன், தனது உறவினர் மருதுபாண்டியனுடன் இருசக்கர வாகனத்தில் விருத்தாச்சலம் அரசு மருத்துவனைக்கு சென்று பிறப்பு சான்றிதழை வாங்கிவிட்டு பெண்ணாடம் நோக்கி வந்துள்ளனர். அப்போது, பெண்ணாடம் துறையூர் பகுதியில் வந்துகொண்டிருந்தவர்கள் மீது, திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி பயணித்த அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஐயப்பன் மற்றும் மருதுபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.