மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிக்கெட் எடுக்க சொன்ன கண்டக்டருக்கு சரமாரி கத்தி குத்து.. சென்னையில் பரபரப்பு.!
சென்னையில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகரை நோக்கி நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த பேருந்து வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் சிக்னலில் நின்ற நிலையில் 2 நபர்கள் திடீரென பேருந்தில் ஏறி உள்ளனர்.
இதில், அந்த 2 பேரிடமும் பேருந்து நடத்துனரான ஜெகதீசன் என்பவர் டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார்.
அப்போது அந்த நபர்கள் எங்களை எப்படி டிக்கெட் எடுக்க சொல்லலாம் என்று கூறி தகராறு செய்துள்ளனர். இதில் இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் அந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்டக்டர் ஜெகதீசனை குத்தினர்.இதனைக் கண்ட பயணிகள் கத்தி கூச்சலிட அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த கண்டக்டர் ஜெகதீசன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இது குறித்து கண்டக்டர் ஜெகதீசன் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.