நாசா நாள்காட்டியில் தமிழக மாணவரின் ஓவியம்; குவிந்து வரும் பாராட்டுகள்.!



2019 nasa calenden tamil student theenmukila

2019ம் ஆண்டுக்கான நாசா நாள்காட்டியில், "விண்வெளியில் உணவு" என்ற தலைப்பில் தமிழக மாணவர் வரைந்த ஓவியம் இடம்பெற்றிருப்பதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த தேன்முகிலன் என்ற மாணவன் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் கலந்து கொண்டார்.

விண்வெளியில் உணவு என்ற தலைப்பில் அவர் வரைந்த ஓவியத்தை நாசா குழுவினர் தேர்வு செய்தனர். இந்நிலையில் தற்போது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாத நாசா நாள்காட்டியில் அந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது.

இதனால் அந்த மாணவருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து தேன்முகிலன் கூறும்போது: உலகளவில் நடைபெற்ற போட்டியில் தனது படம் தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நாசா வெளியிட்ட காலண்டரில், இதேபள்ளியை சேர்ந்த மாணவர்கள் வரைந்த இரண்டு ஓவியங்கள் இடம்பெற்ற நிலையில், இந்த ஆண்டும் இடம் பெற்றுள்ளது   குறிப்பிடத்தக்கது.