மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மஞ்சள் காமாலை நோயால் 22 வயது இளைஞர் மரணம்.. கதறும் குடும்பத்தினர்.!
புதுச்சேரி மதகடிப்பட்டு நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு. நரிக்குறவரான இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் கீதைப்பாளையம் பகுதியில் தொழில் செய்ய சென்றுள்ளார்.
அங்கு பெற்றோர் இல்லாத 5 வயதுடைய சுரேஷ் என்ற சிறுவனை பார்த்து தன்னுடன் அழைத்து வந்து சொந்த மகனைப் போல் வளர்த்து வந்துள்ளார். தற்போது 22 வயதான சுரேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
இந்த நிலையில் சுரேஷிற்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இதில் உடல்நிலை மோசமான நிலையில், புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே சுரேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.