தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
லாரியில் வேட்டை நாய்களுடன் வனவிலங்கு வேட்டைக்கு.. கிளம்பிய 25 பேரை வனத்துறையிர் மடக்கி பிடித்தனர்..!
பெரம்பலூர் மாவட்டத்தில் வனச்சரகர் பழனிக்குமரன் தலைமையில் வன காவலர்கள் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் சுற்றி வந்தனர். இன்று அதிகாலை நான்கு மணியளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூரில் லாரியில் வேட்டை நாய்களுடன் வன விலங்குகளை வேட்டையாட ஒரு கும்பல் வன பகுதிக்கு சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 20 கிலோ மீட்டர் அவர்களை பின்தொடர்ந்து சென்று ஆத்தூர் சாலை எசனை பகுதியில் லாரியை சுற்றி வளைத்தனர். அதன் பிறகு அவர்களிடம் விசாரனை செய்த போது எசனை காப்புக்காடு பகுதிக்கு வன விலங்கு வேட்டையாட சென்றனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் 25 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பெரம்பலூர் வனச்சரகர் பழனிக்குமரன் கூறுகையில், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளில் விராலிமலை அருகில் உள்ள கிராமத்திலிருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 25 பேர், 23 வேட்டை நாய்களுடன் சாப்பாட்டை கட்டிக்கொண்டு லாரியில், முயல் மற்றும் கீரிப்பிள்ளை, காட்டுப்பூனை, உடும்பு போன்ற வன விலங்குகளை வேட்டையாட வந்திருக்கின்றனர். இது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இருந்தாலும் அவர்களிடம் எந்த வனவிலங்கும் இல்லாததால் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றார்.