96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பெண்பார்ப்பதற்காக ஐடி நிறுவனத்தில் பணிபுரிபரை வரவழைத்து அவரை ரூமுக்குள் வைத்து 3 பெண்கள் செய்த வேலை!. பதறிப்போன ஐடி ஊழியர்!.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த காளிசரண் என்பவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் திருமணத்திற்கு மணமகள் தேவை என திருமண இணையதளம் ஒன்றில் தன்னுடைய முழு விவரங்களை இணையதில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் காளிசரணுக்கு நேற்று ஒரு பெண்ணிடம் இருந்து போன் வந்துள்ளது. அதில் பேசிய பெண், உங்களுடைய விவரங்களை இணையதளத்தில் பார்த்தோம். உங்களை பெண்ணுக்கு பிடித்துவிட்டது. நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும் பெண்ணை பார்ப்பதற்கு நாளை வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்துவிடுங்கள் என தெரிவித்துள்ளனர். அந்த நிலையில் நீண்ட நாட்கள் பெண் கிடைக்காமல் விரக்தியில் இருந்த காளிசரண் போன் வந்ததும், ஆசையாய் கிளம்பி சென்றுள்ளார்.
அங்கு ஹோட்டல் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு பெண், உள்ளே உறவினர்கள் இருக்கிறார்கள் என கூறி, அறை ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அறையினுள் 3 பெண்கள் இருந்துள்ளார்கள். அந்த மூன்று பெண்களும் தங்களை போலீஸ் என கூறி அந்த நபரை மிரட்டி, அவரிடம் இருந்த செல்போன், நகைகள், ஏ.டி.எம் கார்டு, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து காளிசரண் வடபழனி குற்றப்பிரிவு பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.