திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அய்யோ!! பெற்றோர்களே உஷார்... சென்னையை தொடர்ந்து நாமக்கல்லில் நாய் கடித்து 3 சிறுவர்கள் படுகாயம்!
சென்னையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 3 சிறுவர்களை தெரு நாய் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கொடூரமான இரண்டு நாய்கள் கடித்ததில் அந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார் (Rottweiler dogs attack).
இதையும் படிங்க: மகன் வீட்டில் விளையாடுகிறானே என அலட்சியமா இருக்கீங்களா?.. பெற்றோர்களே கவனம் - இந்த வீடியோ உங்களுக்குத்தான்.!
சென்னை நாய் கடி:
சிறுமியின் மண்டையோட்டின் சில பகுதிகள் காணப்போகும் அளவிற்கு அந்த சிறுமியை நாய் கடித்தது, பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளநிலையில், தற்போது அந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 3 சிறுவர்களை தெரு நாய் கடித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகத்தில் உள்ள 3 ஆவது வார்டில் நாய் ஒன்று குட்டி போட்டு, தனது குட்டியுடன் அந்த பகுத்தியை சுற்றித்திரிகிறது. இந்நிலையில் அந்த நாய் அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்பவரின் வீட்டில் புகுந்து அவரது 11 வயது மகள் பிரியதர்ஷினியை கடித்து குதறியுள்ளது.
இதையும் படிங்க: அடக்கடவுளே.. 4 மாத குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்: தொட்டிலில் தூங்கிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!
அடுத்தடுத்து கடித்த நாய்:
இந்த சம்பவம் அடங்குவதற்குள், காலை 7 மணியளவில் மணிகண்டன் என்பவரின் 4 வயது மகனான யாகவீரை அதே நாய் கடிதத்தில்அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அதுமட்டும் இல்லாமல், 10 மணியளவில் அதே பகுதியில் சுற்றித்திரிந்த அந்த நாய், மணிகண்டன் சகோதரரின் மகன் பூலோகநாதனையும் கடித்துள்ளது.
சிறுவர்களுக்கு சிகிச்சை:
நாய்கடிக்குள்ளான மூன்று சிறார்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் வெளியே விளையாடும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற அதிகம் வாய்ப்பு இருப்பதால், பெற்றோர்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.