மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொது இடத்தில் தனிமையில் கிடந்த சூட்கேஸ்... திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ரயில் நிலையத்தில் வெகு நேரமாக சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று தனிமையில் கிடந்துள்ளது. நேற்று காலை இதனை கவனித்த ரயில்வே ஊழியர் ஒருவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதனையடுத்து விரைந்து வந்த போலீசார் தனிமையில் கிடந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதில் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்துள்ளது. ஆனால் அந்த நபர் யார் என்பது தெரியவில்லை. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது முன்தினம் இரவு நபர் ஒருவர் அந்த இடத்தில் சூட்கேஸை வைத்து சென்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
அங்கு கிடைத்த சிசிடிவி ஆதாரங்களை வைத்து போலீசார் இறந்து கிடக்கும் நபர் யார்? யார் அவரை கொலை செய்தார்கள் என்றும் குற்றத்தின் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.