மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைக்கேறிய மது போதை! கண்ணிமைக்கும் நேரத்தில் சிதறிய உடல்கள். கோவையில் ஒரு சோக சம்பவம்.
கோயம்பத்தூரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய நான்கு பொறியியல் மாணவர்கள் ரயில் மோதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானலை சேர்ந்த சித்திக் ராஜா, நிலக்கோட்டையை சேர்ந்த ராஜசேகர், ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி மற்றும் கௌதம் ஆகிய நான்கு நண்பர்களும் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்துகொண்டிருந்தபோது நேற்று இரவு 10:30 மணி அளவில் ஆழப்புலா – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் துண்டாகி பலியாகியுள்ளனர்.
இவர்களுடன் அமர்ந்திருந்த மற்றொரு நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மாணவர்கள் ரயிலில் அடிபட்டது குறித்து ரயில் ஓட்டுநர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த அதிகாரிகள் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மது போதையால் மாணவர்கள் ரயிலில் அடிபட்டு இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.