53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் ஆத்திரம்... 6 வயது சிறுவன் அடித்து கொலை.!! அரசு ஊழியர் கைது.!!
காஞ்சிபுரம் அருகே 6 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிங்கிள் மதர்
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தனம். இவருக்கு ஆனந்தன் என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சோபனா என்ற 8 வயது மகளும் குகன் என்ற 6 வயது மகனும் இருந்தனர். மேலும் ஆனந்தன் மற்றும் தனம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவனை பிரிந்த தனம், நேரு நகரில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் பரந்தூர் நிலை எடுப்பு அலுவலகத்திலும் பணியாற்றி வருகிறார்.
சக ஊழியருடன் கள்ளக்காதல்
இந்நிலையில் தனத்திற்கும் அதே அலுவலகத்தில் பணியாற்றி வரும் ராஜேஷ் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் ராஜேஷ், தனம் வீட்டிற்கும் அடிக்கடி வந்து சென்று இருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை தனத்தின் 2 குழந்தைகளையும் ராஜேஷ் தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறியிருக்கிறார். அதற்கு தனத்தின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் தனத்தின் அனுமதியுடன் குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ராஜேஷ் .
இதையும் படிங்க: தந்தை உயிரிழப்பால் வேதனை: மகனும் வருத்தத்தில் விபரீதம்.!
உடல்நிலை சரியில்லாததாக நாடகம்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தனத்திற்கு போன் செய்த ராஜேஷ், குகனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுவனை காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு குகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவனின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் காவல்துறைக்கு, மருத்துவமனை தகவல் கொடுத்துள்ளது.
பாலியல் இச்சைக்கு மறுத்ததால் சிறுவன் கொலை
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த காஞ்சிபுரம் காவல்துறை பொறுப்பு ஆய்வாளர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறை ராஜேஷை கைது செய்து விசாரணை செய்து வந்தது. இந்நிலையில் இறந்த சிறுவனின் அக்கா ஷோபனா, ராஜேஷ் தனது தம்பியை மிதித்து அடித்து துன்புறுத்தியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் ராஜேஷ் இடம் நடத்திய விசாரணையில் சிறுவனை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்த முயற்சித்த போது அவன் முரண்டு பிடித்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த தாக்குதலில் சிறுவன் உயிரிழந்ததாகவும் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் ராஜேஷ். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கழிவுநீர் பள்ளத்தில் விழுந்து இளைஞர் மரணம்; போதையில் தள்ளாடி சோகம்.. இழப்பீடு கேட்கும் இ.பி.எஸ்.!