தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வயது வெறும் நம்பர் தான்! 68 வயதில் அசத்திய மூதாட்டி!!
தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஆரோக்கியமான உடலுடன் ஐம்பது வயதை தாண்டினாலே ஆச்சர்யம் தான். 30 வயதிலேயே மூட்டு வலியில் ஆரம்பம் ஆகி 40 வயது அடைவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது. ஆனால் 68 வயதுடைய பாட்டி ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
டெல்லியில் வசித்து வரும் இந்த மூதாட்டி அவரது மகன் அஜய் சண்மானுடன் ஜிம்மில் சேர்ந்து தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவர் தனது மகன் சொன்னப்படி எடையை தூக்குவதும் உடற்பயிற்சி செய்வதும் என உற்சாகத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. மேலும் இந்த மூதாட்டியையும் அவரது மகனையும் பாராட்டி சமூக வலைத்தளங்கள் கருத்துக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.