மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வழக்கறிஞர் ராஜேஷ் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு.! 8 பேர் நீதிமன்றத்தில் சரண்.!
சென்னை வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் ஒருவரை 7 பேர் கொண்ட மர்ம கும்பல், இரண்டு தினங்களுக்கு முன்பு சரமாரியாகத் தலையில் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர். அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை வில்லிவாக்கம் மேட்டுத்தெருவில் வசித்தவர் ராஜேஷ். இவர் மக்கள் ஆளும் அரசியல் கட்சி என்கின்ற பெயரில் கட்சி ஒன்றினை நடத்தி வந்துள்ளார். அந்தக் கட்சிக்கு ஆலோசகராக ராஜேஷ் இருந்து வந்தார். இந்தநிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வியாசர்பாடியில் கால்பந்தாட்டப் போட்டியை நடத்தினார். அதனை துவங்கி வைத்துவிட்டு வில்லிவாக்கம் தனியார் மருத்துவமனை அருகே இருக்கும் அவரது நண்பரின் அலுவலகத்தில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வந்த மர்மநபர்கள் ராஜேஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். நிலைகுலைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்போக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் அந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 8 பேர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.