மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிலிண்டர் வெடித்து சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயம்!,..அதிகாலையில் நிகழ்ந்த சோகம்..!
சேலம் மாவட்டம், பொன்னம்மாபேட்டை கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் வீட்டின் முதல் மாடியில் இருந்த சுவர்கள் இடிந்து விழுந்ததில் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தோர், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வித்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.