தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் 90 வயது பாட்டி...! குவியும் வாழ்த்துக்கள்!
ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து அணைத்து ஊராட்சிகளிலும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி கனகவல்லி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சுமார் 5000 வாக்குகள் கொண்ட இந்த ஊராட்சியில் இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே தலைவர்களாக இருந்துவருகின்றனர். கனகவல்லியின் கணவர் அழகேசபூபதி நான்கு முறையும், இவர்களது மகன் பார்த்தசாரதி இரண்டுமுறையும் தலைவர்களாக இருந்துள்ளனர்.
தற்போது போட்டியிடும் கனகவல்லியும் 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளார். தற்போது இந்த தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் கனகவல்லி.
தங்கள் குடும்பம் ஊருக்கு தேவையான அனைத்து வாசாதிகளையும் செய்து தருவதாலும், இத்தனை முறை தலைவராக இருந்தும் தங்கள் குடும்பம் மிகவும் எளிமையுடன் இருப்பதாலும், சொத்து எதுவும் சேர்க்கவில்லை என்பதாலும் ஊர் மக்கள் தங்களுக்கு தொடர்ந்து வாக்களிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.