இந்த மனசு தான் கடவுள்!! வாலிபர் ஒருவரின் இதயத்தால் உயிர் வாழும் விவசாயி..!



a-farmer-survives-by-the-heart-of-a-teenager

சேலம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளாக விரிந்த கார்டியோமயோபதி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவருக்கு கடுமையான வென்றிக்குலர் செயலிழப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 14ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மூளைச்சாவடைந்து உயிரிழந்தார்.

Heart Transplant

இதனையடுத்து இறந்த வாலிபரின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர். இதன்படி தமிழ்நாடு உறுப்பு பதிவேட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டு பின்னர் நிலையான பதிவு நெறிமுறையின்படி ரியலா மருத்துவமனைக்கு உடல் உறுப்புகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த வாலிபரின் இதயம் மதுரையில் இருந்து ஒரு மணி நேரத்தில் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்த விவசாயிக்கு அந்த இதயமானது பொருத்தப்பட்டது. மேலும் அந்த விவசாயி நலமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.