மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்தடுத்து மகனையும், மகளையும் பறிகொடுத்த தந்தை: மனமுடைந்து மகளின் துப்பட்டாவில் தொங்கிய சோகம்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மைனர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (43). இவர் டெய்லராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லலிதா (41). இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகனும், அனிதா (17) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில், கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மகேந்திரன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதற்கிடையே, ஒரே மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் வாழ்க்கையில் இன்னொரு பெரிய இடி விழுந்தது. இவரது மகளான அனிதாவும் உடல் நலக்குறைவு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனும், மகளும் மரணமடைந்த சோகத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.
சம்பவம் நடந்த அன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமகிருஷ்ணன் தனது மகளின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.