சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
செல்போன் பேச மொட்டை மாடிக்கு சென்ற சலூன் கடைக்காரர்.. கன்னியாகுமரியில் நேர்ந்த பரிதாபம்!

கேரள மாநிலத்தைச் சார்ந்த சலூன் கடை தொழிலாளி ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் விக்ரமன். இவரது மகன் அணு சலூன் கடை தொழிலாளியான இவர் கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டை பகுதியில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனால் சில வருடங்களுக்கு முன்பாக குடும்பத் தகராறு காரணமாக அவர்கள் பிரிந்து விட்டனர். இவர் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்று அவர் செல்போன் பேசுவதற்காக மொட்டை மாடிக்கு சென்று இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அனுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச் சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.