மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணை மறைத்த மது போதை... குடிபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற... மேட்டுப்பாளையத்தில் சுற்றி வளைத்த போலீஸ்.!
மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்த நபரை அவருடன் பணியாற்றியவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஏரி பாளையத்தைச் சார்ந்தவர் ராம்குமார் 26 வயதான இவரும் இவரது நண்பரான திருப்பூரைச் சார்ந்த ஜெயக்குமார் என்பவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் பை தயாரிக்கும் நிறுவனத்தில் டெய்லராக வேலைக்கு சேர்ந்துள்ளனர். கடந்த நான்காம் தேதி ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர் . அப்போது ராமநாதபுரத்தைச் சார்ந்த கருணைநாதன் என்பவருக்கும் ராம் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
கருணைநாதன் தன்னுடைய தாயைப் பற்றி தவறாக பேசியதால் அவரை அடிக்கச் சென்று இருக்கிறார் ராம்குமார். அங்கிருந்தவர்கள் சமாதானம் பேசி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். இருவரும் தங்கள் அறைக்கு வந்து இருக்கும்போது அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து ராம்குமாரை பலமாக தாக்கியிருக்கிறார் கருணை நாதன். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதன் பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் தப்பி ஓடிய கருணை நாதனை தீவிரமாக தேடி வந்தனர். மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் . அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னைவிட வயதில் குறைவான ராம்குமார் தன்னை இழிவாக பேசியதால் ஆத்திரத்தில் அடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.