நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
தேர்தல் முன்விரோதத்தால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு!,, வக்கீல் தாதா அடாவடி..!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராசாம்பாளையம் கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் தாணு (34). இவர் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். இவர் நடந்து முடிந்த கிராமப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில், இந்த ஊராட்சியின் 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் என்பவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இளங்கோவனுக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (22) என்பவர் தேர்தல் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இவருக்கும், தாணுவுக்கும் இடையே ஏற்கனவே தேர்தல் விவகாரம் காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு ராசாம்பாளையம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பாலசுப்பிரமணியம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த வக்கீல் தாணுவும், அவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த கண்ணன் (45) என்பவரும் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாலசுப்பிரமணியம் அளித்த புகாரின் அடிப்படையில், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வக்கீல் தாணுவை கைது செய்ததுடன், கண்ணனை தேடி வருகின்றனர்.