செல்போன் பேசியவாறு, யானை பதறி ஓடவைத்த பெண்மணி.. பாகனுக்கு பின்னால் டமால்.! வைரல் வீடியோ.!!



a Woman Accident While Drive Two Wheeler Speaking Mobile Elephant Feared

சாலைகளில் பயணம் செய்யும் போது விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க வாகனத்தை கவனமாக இயக்க வேண்டும், செல்போன் பேசியபடி பயணம் செய்ய கூடாது, தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும், கவனச்சிதறல் இல்லாமல் வாகனத்தை செலுத்த வேண்டும் என்று பல்வேறு விதிகளுடன் வாகனத்தை நாம் இயக்கி வருகிறோம். 

இவை ஒவ்வொன்றும் நமது உயிருக்கு தொடர்புடையது என்பதால், சிறு கவனச்சிதறல் அல்லது அதிவேகம் என்பது கட்டாயம் ஏதோ ஒரு சூழ்நிலையில் உயிரையும் பறிக்கலாம். இந்த நிலையில், முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோவில், நிகழ்ச்சி ஒன்றுக்காக யானை பாகனுடன் சாலையில் நின்று கொண்டு இருந்த நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்மணி செல்போனில் பேசியபடி வருகிறார். வாகனத்தில் வந்தவர் யானை அருகே நின்ற பாகனின் மீது மோதி வாகனத்தை நிறுத்துகிறார். 

அருகில் இருந்த யானையோ தன்னை யாரோ தாக்கிவிட்டார்கள் என்ற பயத்தில் பதறியபடி ஓட்டம் எடுக்கிறது. இதுகுறித்த வீடியோ எப்போது? யாரால்? பதிவு செய்யப்பட்டது என்ற தகவல்கள் இல்லை என்றாலும், கடந்த 5 ஆம் தேதி தான் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும், சாலை பயணத்தில் அலட்சியமாக செல்போன் பேசிக்கொண்டு பயணம் செய்யக்கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.