Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
குற்றவாளியை தேடச்சென்று ஆற்றில் சிக்கி உயிரிழந்த இளைஞர்; தேனியில் சோகம்.!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், ஆங்கூர்பாளையம் பகுதியில் வசித்து வரும் 80 வயது மூதாட்டியிடம் சாமுண்டிபுரம் பகுதியைச் சார்ந்த விஜயகுமார் என்பவர் தவறாக நடக்க முயற்சித்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக கூடலூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் விஜயகுமாரை அடையாளம் காட்ட அதே கிராமத்தில் வசித்து வரும் முகிலன், கிருஷ்ணன், அருண்பாண்டி, பிரபுதேவா (வயது 28) ஆகியோரை காவல்துறையினர் சாமுண்டிபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அச்சமயம் முல்லைப் பெரியாறு பகுதியை கடக்க முயன்ற பிரபுதேவா ஆற்றின் பிடியில் சிக்கி மாயமானார்.
இதனால் பதறிப்போன காவல்துறையினர் விஜயகுமாரை தேடுவதை கைவிட்டு இருக்கின்றனர். மேலும் பிரபுதேவா வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் சுருளிப்பட்டி, முல்லைப் பெரியாறு பகுதியில் பிரபுதேவாவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், பெண் குழந்தையும் இருக்கின்றனர். குடும்பத்தினர் பிரபுதேவாவின் மறைவை அறிந்து கதறியழுவது காண்பவரே சோகத்தில் ஆழ்த்தியது.