Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
நடிகர் மற்றும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்தீஷ் திடீரென மரணம்! சோகத்தில் அரசியல் மற்றும் சினிமா வட்டாரம்
நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.
2009 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ரித்தீஷ், இன்று மதிய உணவு இடைவேளையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
'சின்னப்புள்ள' என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து, 'நாயகன்', 'கானல் நீர்', 'பெண் சிங்கம்' உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் 'எல்.கே.ஜி' படத்தில் 'ராம்ராஜ் பாண்டியன்' என்ற நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.