கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: ஏர்டெல், ஜியோ நெட்வொர்க் சேவை திடீர் பாதிப்பு.. பயனர்கள் அவதி.!!
தலைநகர் சென்னையை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயலின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஒட்டுமொத்த மின்சார சேவையானது பெரும்பாலான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக தொலைதொடர்பு சேவைக்கு தற்காலிக ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி வசதியுடன் மின்சார சேவை வழங்கப்பட்டன.
இந்நிலையில் செல்போன் கோபுரங்களில் அமைக்கப்பட்டிருந்த பேட்டரி சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை நகரில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்தின் நெட்வொர்க் சேவை பாதிப்பை சந்தித்துள்ளன.
இதனால் பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ள வசதி இல்லாமல் இன்டர்நெட் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமையை விரைந்து சீரமைக்கும் பொருட்டு மீட்பு பணிகள் நடைபெற்ற வருகின்றன.