பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
20 நிமிடத்தில் மிகத்துல்லியமாக கொரோனா பரிசோதனை முடிவுகள்.. அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.!
உலகளவில் கொரோன பரிசோதனையை மேற்கொள்ள ஆர்.டி.பி.சி.ஆர் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வர காத்திருக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செல்போன் மூலமாக கொரோனா பரிசோதனை நடத்தும் முறையை கண்டறிந்துள்ளனர்.
ஹார்மனி கோவிட் கிட் என்று அழைக்கப்படும் பரிசோதனை முறையின் மூலமாக, சார்ஸ் கோவ்-2 வைரஸின் மரபணு கண்டறியப்படும். இதுகுறித்து வாஷிங்க்டன் பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவிக்கையில், "குறைந்த கட்டத்தில் அனைவரும் உபயோகம் செய்யும் வகையில் எளிதாக கொரோனா முடிவுகளை பெற இந்த கிட் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தளவு கட்டணம், உயர்செயல்திறன் கொண்ட சோதனை உள்நாட்டிலும், உலகளவிலும் உபயோகம் செய்யலாம். ஸ்மார்ட்போன் மற்றும் டிடெக்டர் போன்றவற்றை உபயோகம் செய்து முடிவை விரைந்து தெரிந்துகொள்ளலாம். நிலையான வெப்பத்தில் இந்த சோதனை நடைபெறும். வெப்பம், குளிர்விக்கும் நேரத்தை இது நீக்குவதால், 20 நிமிடத்தில் முடிவை அறியலாம்" என்று தெரிவித்தார்.
மேலும், "ஒரே நேரத்தில் 4 மாதிரியை சோதனை செய்து, சோதனை முடிவுகளை மிகத்துல்லியமாக பெறலாம். ஹார்மனி கொரோனா கிட் வைரஸின் மரபணுவில் 3 வெவ்வேறு பகுதியை உள்ளடக்கியது. புதிய பிறழ்வுகளையும் இதன் வாயிலாக சோதனை செய்யலாம். ஒமிக்ரான் வகை மாறுபாடு கொண்ட வைரஸையும் இதன் வாயிலாக கண்டறிய இயலும்" என்றும் பேராசிரியர் தெரிவிக்கிறார்.