மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொந்த வீட்டுக்கே சூனியம் வைத்த மூதாட்டி: இரவு செய்த காரியத்தால் காலையில் நடந்த விபரீதம்..!
சீர்காழி அருகே பாதுகாப்பிற்காக வீட்டின் கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து வசித்து வந்த மூதாட்டி, மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானிய தெருவில் வசித்து வந்தவர் அன்பழகி (68). இவர் சீர்காழி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அன்பழகியின் கணவர் இறந்து விட்டதால், அவருக்கு குழந்தைகளும் இல்லாததால் தனியாக வசித்து வந்தார்.
தனியாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் மின் இணைப்பு கொடுத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். காலையில் எழுந்தவுடன் மின் இணைப்பு துண்டிக்க மருந்து பீரோவை திறந்து உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அன்பழகி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் அன்பழகி வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது மின்சாரம் தாக்கி அவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் அன்பழகியின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.