அவுட்சோர்சிங் முறையில் பேராசிரியர்கள் நியமன விவகாரம்; அண்ணா பல்கலைக்கழகம் பின்வாங்கியது.!



Anna University about Outsource Requirement 

அவுட்சோர்சிங் முறையில் பேராசிரியர்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதனை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், அண்ணா பல்கலை.யில் காலிப்பணியிடங்களை நிரப்ப அவுட்சோர்சிங் முறையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

கிளம்பிய எதிர்ப்பு

இந்த விசயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அரசுப்பணிகளுக்காக காத்திருக்கும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 

இதையும் படிங்க: #Breaking : நாதக-வில் அடுத்த கூடாரம் காலி.. கோவை வடக்கு மா.செ கட்சியில் இருந்து விலகல்.!

மறுஅறிவிப்பு வெளியீடு

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் நிர்வாகம், ஆசிரியர் அல்லாத பணிகளை மேற்கொள்வோருக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியில் அமர்த்தப்படுவார்கள். 

அவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். அவுட்சோர்சிங் முறையில் பேராசிரியர்கள் நியமன அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: #JustIN: அதிமுக நிர்வாகிகள் களஆய்வு கூட்டத்தில் மோதல்.. முன்னாள் அமைச்சர் முன்னிலையில் சம்பவம்.!