மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking : நாதக-வில் அடுத்த கூடாரம் காலி.. கோவை வடக்கு மா.செ கட்சியில் இருந்து விலகல்.!
சீமானை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர், எங்களுக்கு கட்சியின் செயல்பாடு பிடிக்காத காரணத்தால் அமைதியாக விலகுகிறோம் என முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி கொண்ட அக்கட்சியினர், தொடர்ந்து தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். சீமான் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கட்சியில் இருந்து மாவட்ட செயலாளர்கள் விலகி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோவை மாவட்ட வடக்கு செயலாளர் ராமச்சந்திரன் உட்பட 20 பேர், தங்களை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: #Breaking: நாம் தமிழர் மா.செ கட்சியில் இருந்து விலகல்; செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் ஆதரவாளர்கள்.. அடிதடி., மோதலால் பரபரப்பு.!
அமைதியாக விலகுகிறோம்
இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமச்சந்திரன், "வேட்பாளர்கள் தேர்வு சரியில்லை, மக்கள் நம்மை கவனிப்பது இல்லை. உறவினர்களே கட்சியை ஆதரிப்பதில்லை. கொள்கை சார்ந்த விஷயத்தில் மக்கள் நாம் தமிழர் கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. பொறுப்பாளர்கள் மீது எந்த விதமான வருத்தமும் இல்லை. கட்சியின் தலைமை மீதும் வருத்தம் இல்லை.
சீமானை தவறாக வழிநடத்துகிறார்கள்
ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி காரணமாக விலகுகிறோம். நாங்கள் சீமானின் மீதும் குற்றசாட்டுகளை முன்வைக்கவில்லை. பொறுப்பாளரில் இருந்து நாங்கள் விலகுகிறோம். ஒட்டுமொத்தமாக கோவை மாவட்ட வடக்கு பொறுப்பாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுகிறோம். சீமானை சுற்றி இருக்கும் சிலர், அவரை தவறாக வழிநடத்துகிறார்கள்" என கூறினார்.
இதனிடையே, சீமான் ஒரு சமூகத்தை வந்தேறி என பேசியதால், கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டு ராமச்சந்திரன் தந்து பொறுப்புகளில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #JustIN: அதிமுக நிர்வாகிகள் களஆய்வு கூட்டத்தில் மோதல்.. முன்னாள் அமைச்சர் முன்னிலையில் சம்பவம்.!