#JustIN: அதிமுக நிர்வாகிகள் களஆய்வு கூட்டத்தில் மோதல்.. முன்னாள் அமைச்சர் முன்னிலையில் சம்பவம்.!



Tirunelveli AIADMK Meeting Clash 22 Nov 2024 

நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள், கொள்கை பரப்பு நிர்வாகிகள் இரண்டு அணியாக பிரிந்து மோதிக்கொண்டனர்.

2026 சட்டப்பேரவை தேர்தலில், கடந்த தேர்தலில் தவறவிட்ட ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என அதிமுக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள், மூத்த அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். மாவட்ட அளவிலான கூட்டங்கள் நடைபெறுகின்றன.

களஆய்வு கூட்டத்தில் மோதல்

அந்த வகையில், திருநெல்வேலியில் அதிமுக களஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வு கூட்டத்திற்கு வந்திருந்த நிலையில், அவர்கள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: முன்விரோதத்தில் அதிமுக நிர்வாகி படுகொலை; சிவகங்கையை அதிரவைக்கும் சம்பவம்..!

வாக்குவாதம்-மோதல்

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போதைய மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா, கட்சிப்பணிகளை சரிவர செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்றைய கூட்டத்தில் இருதரப்பு தொண்டர்கள் வாக்குவாதம் செய்துகொண்டு, மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாகிகளுக்குள் மோதல்

முன்னாள் அமைச்சர் கலந்துகொண்ட கூட்டத்தில் இருதரப்பு மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட காரணத்தால், அங்கு பரபரப்பு சூழல் உண்டாகி இருக்கிறது. நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா மற்றும் கொள்கை பரப்பு அணி நிர்வாகிகள் இடையே இந்த மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க: "அமெரிக்கா போயிருந்தா அம்மா இருந்திருப்பாங்க" - முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேச்சு.!