தனது காலை இழந்தாலும், விடாமல் ஓடி வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர்!



army man won gold

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் ஆனந்தன்.  ஆனந்தனுக்கு பள்ளி பருவத்திலேயே தடகளப் போட்டிகளில் அதிகம் ஆர்வம் இருந்துள்ளது. ஆனந்தன் தாய்நாட்டிற்காக இராணுவத்தில் பணியாற்றியபோது, 2008ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிகழ்ந்திய கண்ணி வெடி தாக்குதலில், சிக்கி அவரது இடது காலை இழந்தார் ஆனந்தன்.

தனது காலை இழந்தாலும் தாய் நாட்டுக்காக பெருமை சேர்க்க எண்ணிய ஆனந்தனுக்கு கை கொடுத்தது அவரது சின்னவயது ஆசையான தடகளப்போட்டி. செயற்கையாக பிளேட் பொருத்தப்பட்டபின் நடை பயிற்சியையும், வேகமாக ஓடும் பயிற்சியையும் அவர் மேற்கொண்டார் ஆனந்தன். தொடர்ந்து பல்வேறு ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளார்.

army

இந்நிலையில், 144 நாடுகள் பங்கேற்ற 7-வது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டிகள் கடந்த மாதம் சீனாவில் நடைபெற்றது. இதில் ஆனந்தன் கலந்துகொண்டு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று 3 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து அவரது சொந்த ஊரான கும்பகோணத்துக்கு நேற்று வந்த ஆனந்தனுக்கு உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர் படித்த பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.