Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
நெடுஞ்சாலை பணியாளரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் கைது.!
தமிழக பாஜக மாநில தலைவர் என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு வருகை தருகிறார்.
இதனையடுத்து சங்கரன்கோவில் - புளியங்குடி சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி இன்றி பாஜகவினர் சுவர் விளம்பரம் செய்துள்ளனர். இதனை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அழித்தனர்.
இதனையடுத்து சங்கரன்கோவில் பாஜக நகர இளைஞர் அணி பொறுப்பாளர் விக்னேஷ், நகர தலைவர் கணேசன் இருவரும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுப்பிரமணியன் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பணியாளர் காயமடைந்த நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் பாஜக நிர்வாகிகள் கணேசன் மற்றும் விக்னேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.