பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
#JustIN: டாஸ்மாக் முற்றுகை போராட்டம்; பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் கைது.!

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்தது என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விஷயம் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே டாஸ்மாக்கில் மதுபான பாட்டீலுக்கு கூடுதல் தொகை வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்து வந்த நிலையில், பல்வேறு விஷயங்களில் டாஸ்மாக் நிறுவனம் முறைகேடு செய்து, ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்தை கூறியது.
செந்தில் பாலாஜி துறையில் முறைகேடு
ஏற்கனவே மதுவிலக்கு, மின்சாரம், & ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்து மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்றார். இதனிடையே, அவர் சார்ந்த துறையில் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: பொய்யும் புரட்டும் வேளாண் பட்ஜெட்.. அம்புலி மாமா கதை என்னாச்சி? - வேளாண் பட்ஜெட்டுக்கு அண்ணாமலை ஆவேசம்.!
இதனால் டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று, துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக சார்பில் முறையிடப்பட்டுள்ளது. மேலும், 17 மார்ச் 2025 இன்று, காலை 10 மணியளவில், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
வினோஜ் கைது
இந்நிலையில், சென்னை தியாகராஜ்நகர் பகுதியில் வசித்து வரும் பாஜக பிரமுகர் வினோஜ் பி செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வத்தின் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடத்த அண்ணாமலை உத்தரவிட்டு இருந்தார்.
இதனால் வீட்டில் இருந்த வினோஜ் பி செல்வம், வெளியே புறப்படுவதற்குள் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரின் வீட்டு முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து அவர் போராட்டக்களத்திற்கு செல்ல ஆயத்தமானதால், வினோஜை கைது செய்த காவல்துறையினர் அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹிந்தி திணிப்பை உறுதி செய்தால் ரூ.99 இலட்சம் பரிசு.. திருப்பூர் பாஜக அறிவிப்பு.!