ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் வாலிபர் பிணம்: துப்பு கிடைக்காமல் துவளும் போலீசார்..!
பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த வடமாநில வாலிபர் குறித்து எந்த துப்பும் கிடைக்காமல் ரயில்வே போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னை ஆவடி அருகேயுள்ள அண்ணனுார் பகுதியில் மின்சார ரயில்களை பராமரிக்கும் ரயில்வே பணிமனை உள்ளது. அங்கு கடந்த 7ஆம் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயிலில், 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர், துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி ரயில்வே காவல்துறையின,ர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியும் இறந்தவர் யார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.