#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள்!
சென்னை கந்தன்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கந்தன்சாவடியில் உள்ளஐடி நிறுவனத்தில் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவந்த நிலையில் உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள்,13 அடுக்குகளை கொண்ட இந்த ஐடி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்குப்பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இந்த கம்பெனியில் கான்பிரன்ஸ் நடக்கவிருந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தொழில் போட்டி காரணமாகவும் மிரட்டல் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொலை பேசி மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.