அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..மின் இணைப்பை துண்டிக்காததால் நடந்த விபரீதம்...கண்ணீரில் பெற்றோர்.!
குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை பயன்படுத்திய சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மந்தைவெளி பகுதியில் 9ஆம் வகுப்பு பயின்று வரும் ஹேம்நாத் எனும் ஒரு சிறுவன் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் குளிப்பதற்காக வீட்டின் குளியலறைக்கு சென்ற சிறுவன் ஹேம்நாத் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்திய போது, தண்ணீர் சூடாகிவிட்டதா என்பதை பார்ப்பதற்காக மின் இணைப்பை துண்டிக்காமல், அதற்குள் கைவைத்ததால் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்..
இதனைக்கண்ட பெற்றோர், உடனடியாக சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில், வாட்டரை பயன்படுத்திய சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அத்துடன் குறைந்த விலையில் பாதுகாப்பு இல்லாத வாட்டர் ஹீட்டரை பயன்படுத்துவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.