மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டப்பகலில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய இளைஞர்.. கொதித்தெழுந்த பொதுமக்கள்.!
ராணிப்பேட்டை அருகே பனப்பாக்கத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போதே இளைஞர் ஒருவர் பள்ளி மாணவிகளை நோக்கி ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள், அருகில் இருந்தால் பொதுமக்களிடம் கூறியுள்ளனர்.
இதனிடையே அந்த இளைஞர் தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் இளைஞரின் சட்டையை கிழித்து கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
மேலும் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் இளைஞரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் மேலப்புலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.