மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா! பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!
நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பேரவை தொடங்கியதும் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
தமிழகத்தில் முதலஅமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, நாளையுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-வது ஆண்டு தொடங்குகிறது. எனவே, அதன் அடிப்படையிலும், புதிய சலுகைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.
இந்தநிலையில், நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அரசு பேருந்துகளில் மின்னனு பயணசீட்டு முறை கொண்டுவரப்படும். பணமில்லா பரிவர்த்தனை பயண சீட்டு பெரும் முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய அம்சங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் வாசித்து வருகிறார்.