மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
101 முறை... நான்கு ஆண்டுகள்.. ஒரு கோடிக்கு மேல் மோசடி.. வங்கியில் கவரிங் நகைகளை வைத்து போட்ட மாஸ்டர் பிளான்.!
சென்னை நந்தனம் அண்ணா சாலையில் இருக்கும் சிண்டிகேட் வங்கி தற்போது கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராகத் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முரளி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் முரளியை பார்க்க நகையுடன் நபர் ஒருவர் வங்கிக்கு வந்துள்ளார். அப்போது அந்த நபரை எதிர்பாராத விதமாக வங்கி மேலாளர் பிரவீன் குமார் சந்தித்து விசாரித்துள்ளார். அந்த நபர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் பிரவீன் குமார், நகை மதிப்பீட்டாளர் முரளியை விசாரித்து, அவரது பொறுப்பிலிருந்த நகைகளை சரி பார்த்துள்ளார். அதில் 101 முறை போலி நகை அதாவது கவரிங் நகைக்கு கடன் கொடுத்து ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து பிரவீன் குமார்
சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன்பின் போலீசார் முரளியை கைது செய்து விசாரணையில் ஈடுபட்ட போது பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது முரளி தங்க நகைக்கடன் பெறும் வாடிக்கையாளர்களாகத் தனது நண்பர்கள், உறவினர்களை ஈடுபடுத்தியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் போல் அவர்கள் வங்கிக்கு வந்து கவரிங் நகைகளை வைத்து கடன் பெறுவர். அவர்களுக்கு கிடைக்கும் கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் கமிஷனாக கொடுத்து விட்டு மீதமுள்ள அனைத்து பணத்தையும் முரளி வைத்தது தெரியவந்துள்ளது. கவரிங் நகைகளை வைத்து கோடி கணக்கில் கடன் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.