மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தூக்கில் சடலமாக தொங்கிய 9 வயது சிறுமி; சந்தேகிக்க வைக்கும் மர்ம மரணம்.. செங்கல்பட்டில் சோகம்.!
சந்தேகத்தை ஏற்படுத்தும் 9 வயது சிறுமியின் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 வயது சிறுமி
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்தீஸ்வரர் காலனி, நான்காவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் பிரபு. இவரின் மகள் ஹன்சிகா (9). சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லை. 9 வயது சிறுமி மற்றும் அவரின் 4 வயது தங்கை மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். இதனிடையே, சிறுமி ஹன்சிகா காட்டில் மீது பிளாஸ்டிக் நாற்காலியை போட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: கராத்தே பயிற்சியில் பாலியல் தொல்லை; மாஸ்டரை ஸ்கெட்ச் போட்டு கதைமுடித்த கணவன் - மனைவி.!
மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதால் அதிர்ச்சி
பின், அதன் மீது ஏறி மின்விசிறியில் கயிறை போட்டு தூக்கிட்டதாக தெரியவருகிறது. 4 வயது சிறுமி அக்கா பேச்சு இன்றி தொங்குவதை கண்டு அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியுடன் வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை உடனடியாக மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
காவல்துறை தீவிர விசாரணை
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் இறப்பை உறுதி செய்தனர். பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது விளையாட்டு வினையானதா? யாரேனும் கொலை செய்து தற்கொலை போல ஜோடிக்கின்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எல்கேஜி சிறுமியை கூட விட்டு வைக்காத காமக்கொடூர ஆசிரியர்கள்!