அரசு மருத்துவரின் அலட்சியத்தால் இளம்பெண் பலி?.. கருத்தடை சாதனம் அகற்றும் முயற்சியில் நடந்த பயங்கரம்.. உறவினர்கள் கண்ணீர்.!



chengalpattu-women-copper-t-remove-surgery-death

 

குழந்தையை தள்ளிப்போட காப்பர் டி பொருத்திக்கொண்ட பெண், அதனால் உடல் நலக்குறைவை சந்தித்த காரணத்தால், அதனை அகற்ற மருத்துவமனையில் அனுமதியாகி பலியான சோகம் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தை சேர்ந்த பெண்மணி திவ்யா. இவரின் கணவர் ஜானகிராமன். தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருப்பதால், உடனடியாக மற்றொரு குழந்தை வேண்டாம் என முடிவெடுத்து தற்காலிகமாக (குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு வரை) கருத்தடையை ஏற்படுத்த காப்பர் டி சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. 

அரசு மருத்துவமனை மருத்துவர் பிரசவத்திற்கு பின்னர் காப்பர் டி சாதனத்தை பொறுத்தியுள்ளார். இந்த சாதனத்தை பொருத்திக்கொண்டு திவ்யாவுக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பிறப்புறுப்பு பகுதிகளில் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது. 

Chengalpattu

இதனால் அதனை அகற்ற முடிவு செய்த திவ்யா மற்றும் கணவரின் குடும்பத்தினர், சிகிச்சைக்காக மதுராந்தகம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகினர். அங்கு சிகிச்சையின் போது திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை முதலிலேயே தெரிவிக்காத நிர்வாகம், 4 மணிநேரம் உறவினர்களை பதைபதைக்க வைத்து தகவல் கூறியுள்ளது. 

இந்த செய்தி உறவினர்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்த, அவர்கள் மருத்துவமனைக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த மாவட்ட சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் திவ்யாவின் உறவினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். காப்பர் டி சாதனம் சரியாக பொறுத்தப்படாதது, அதனை எடுக்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக திவ்யா உயிரிழந்து இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.