மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் இரயில் மீது கற்களை வீசி தாக்குதல்.. கல்லூரி மாணவர்களிடையே வன்முறை மோதலால் மக்கள் பீதி.!
சென்னையில் உள்ள சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து, திருப்பதி நோக்கி அதிவிரைவு இரயில் பயணம் செய்தது. இந்த இரயிலில் சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார இரயிலில் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
இரண்டு கல்லூரி மாணவர்களும் தங்களின் கெத்தை காண்பிக்கிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்ள, திருப்பதி அதிவிரைவு இரயிலில் பயணம் செய்த பயணிகள் பொறுமையை இழந்து இரயில் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இரயிலில் இருந்து இறங்கிய மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த மின்சார இரயில் மீது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழல் நிலவியது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த செம்பியம் காவல் துறையினர், கல்லூரி மாணவர்களை கைது செய்து பெரம்பூர் இரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.