மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதைக்கு அடிமையான பெற்றோர்; தின்பண்டம் வாங்கி கொடுத்து மூவர் கும்பலால் சீரழிக்கப்பட்ட சிறுமி.!!
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
காவல்துறையினருக்கு தகவல்
மருத்துவமனையில் சிறுமி பலாத்காரம் தொடர்பான விஷயத்தை எதிர்கொண்டது உறுதி செய்யப்படவே, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: "குடிக்க மட்டும் பயன்படுத்துங்க".. தண்ணீர் பற்றாக்குறையால் காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய சென்னை மக்கள்.!
ஆறு மாதமாக மூவர் கும்பல் பலாத்காரம்
அதாவது கடந்த ஆறு மாதமாக சிறுமியை மூவர் கும்பல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பதாக சிறுமியின் பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், தையல் கடைக்காரர் என மூன்று பேர் சேர்ந்து கொடுமையை அரங்கேற்றியது உறுதியானது.
போதையால் சிறுமியை கண்டுக்கொள்ளாத பெற்றோர்
சிறுமியின் பெற்றோர் இருவரும் மது போதைக்கு அடிமையான நிலையில், மகளை கண்டுகொள்ளாததால் சித்தி வீட்டிற்கு வந்த சிறுமி வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு துயரம் அம்பலமானது.
போக்சோவில் கைது
இந்த விசாரணைக்கு பின்னர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!