மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"குடிக்க மட்டும் பயன்படுத்துங்க".. தண்ணீர் பற்றாக்குறையால் காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய சென்னை மக்கள்.!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது மழை குறைந்ததால் சென்னை போர்வெல்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் உபயோகத்திற்காக மெட்ரோ நீரை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர் என மெட்ரோ வாட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!
குடிக்க மட்டும் நீரை பயன்படுத்த அறிவுறுத்தல்
இந்நிலையில் மெட்ரோ வாட்டர் நிர்வாகம் குடிநீரை மட்டுமே வழங்குவதால் அதனை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியும் சிலர் கார் கழுவுவதற்கும், தோட்டத்திற்கும் பயன்படுத்துகின்றனர் என கூறப்படுகிறது.
குடிநீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்துமாறும் கார் கழுவுதல், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட இதர பயன்பாடுகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் மெட்ரோ வாட்டர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் முன்னாள் அண்ணா பல்கலை., கௌரவ பேராசிரியர்; அதிரவைக்கும் சம்பவம்.!