#Breaking: அம்மா-அப்பா படிக்க அனுப்பினால், கல்லூரிக்கு கூட செல்லாமல் மோதல் - நீதிபதிகள் வேதனை.! 



  Chennai HC Sad about Chennai College Students Fight 

வீடு வேலை செய்து பெற்றோர் படிக்கச் அனுப்பும் நிலையில், கல்லூரிக்கு செல்லாமல் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவது வேதனையை தருகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள திருத்தணி பகுதியை சேர்ந்த மாநிலக்கல்லூரி மாணவர், பச்சையப்பன் கல்லூரி மாணவரால் நவம்பர் 4 அன்று கொலை செய்யப்பட்டார். இரண்டு மாணவர்கள் மோதலில், மாநிலக்கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முக்கிய குற்றவாளியாக சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவர்களில் மோதலால் நீதிபதிகள் வேதனை

இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் தனக்கு ஜாமீன் வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அம்மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், "பெற்றோர் மாணவர்களை வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு படிக்க அனுப்பி வைக்கின்றனர். 

இதையும் படிங்க: கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்; இளைஞருக்கு ஜாமின் மறுப்பு.. நீதிமன்றம் உத்தரவு.!

நிலைமை இப்படியிருக்க, கல்லூரிக்கு கூட மாணவர்கள் செல்லாமல் அடிதடியில் ஈடுபடுகிறார்கள். ஜாமீன் கோரிய மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். வழக்கின் விசாரணை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உயிரை பறித்த கள்ள உறவு... 2 பிள்ளைகளின் தாய் கொடூரமாக கொலை.!! காதலன் வெறி செயல்.!!