சர்வ சாதரணமாக நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றம்; எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.!



   Chennai IIT Student Sexual Harassment 

சென்னையில் உள்ள ஐஐடி கேண்டினில், ஐஐடி-யில் பயின்று வந்த மாணவி டீ குடிக்கச் சென்றபோது பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்ட்டர். இந்த விஷயம் தொடர்பான செய்திகள் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விஷயம் குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை ஐஐடி கேன்டீனில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அச்ச நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளிய முக ஸ்டாலினின் திராவிட மாடல் அரசுக்கும் எனது கடும் கண்டனம்.

இதையும் படிங்க: #Breaking: இது ஜனநாயக படுகொலை.. இருட்டடிப்பு: எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.!

பெண்கள் கல்வியே சமூகத்தை உயர்த்தும்; அவர்கள் அதைப் பெறுவதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட வேண்டியது தங்கள் தலையாயக் கடமை என்பதை மத்திய மாநில அரசுகளும்; கல்லூரி நிர்வாகங்களும் உணரவேண்டும்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவன் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன்; இனியேனும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழ்நாட்டில் அமைத்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வருமானவரித்துறை சோதனை விவகாரம்; எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு.!