96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சென்னையில் பேரதிர்ச்சி.! திருநங்கை காதலனின் ரகசியம் அறிந்து காதலை கைவிட்ட இளம்பெண்; பிறந்தநாள் பரிசு தருவதாக தீர்த்துக்கட்டிய பயங்கரம்..!
மதுரையை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் நந்தினி (வயது 28), சென்னையில் செயல்பட்டு வரும் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். வெற்றி என்பவரை காதலித்து வந்ததாக தெரியவருகிறது.
வெற்றி திருநங்கை என கூறப்படும் நிலையில், உண்மையை அறிந்த நந்தினி காதலை முறித்துக்கொண்டு இருக்கிறார். தற்போது வேறொருவருடன் காதல் வயப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்று நந்தியனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அச்சமயம் முன்னாள் காதலன் வெற்றி, நந்தினியை கோவில் உட்பட பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அவரும் நம்பி சென்றுள்ளார்.
இதனிடையே, இரவில் தனது காதலியை கேளம்பாக்கம் பகுதிக்கு அழைத்து சென்ற வெற்றி, இன்ப அதிர்ச்சி தருவதாக நந்தினியின் கை, கால்களை சங்கிலியால் கட்டி, உடல் பாகங்களை துண்டு துண்டாக அறுத்து கொலை செய்துள்ளார்.
பின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தினியின் முன்னாள் காதலர் வெற்றி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.