மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரேஷன் கடையில் கேஸ் சிலிண்டர் விநியோகம்.... அதிரடி தகவலால் உற்சாகத்தில் மக்கள்.!
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பல்பொருள் அங்காடியில் முதன்முதலாக கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வர உள்ளன. சென்னையில் முதல் முறையாக 2 கிலோ சமையல் கேஸ் ரூபாய் 958 க்கும், 5 கிலோ சிலிண்டர் ரூபாய் 1515 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டாவது முறை சிலிண்டர் வாங்குவதற்கு அதற்கான தொகை மட்டும் கொடுத்து நிரப்பி விடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாவது முறையில் இருந்து பெறப்படும் சிலிண்டர் 2 கிலோ ரூபாய் 250 க்கும், 5 கிலோ ரூ.575 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நடைமுறை வெற்றியடையும் பட்சத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்கள் எளிய முறையில் சிலிண்டர்களை பெறலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.